கனமழையின் காரணமாகவும் காற்றின் வேகம் அதிகரித்து காணப்படுதாலும் மீனவர்கள் கடந்த மூன்று நாட்களாக மீன் பிடிக்க கடலுக்கு செல்ல வில்லை.
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதாலும், இலங்கைக்கு அருகே நிலை கொண்டிருந்த வளி மண்டல மேலடுக்கு சுழற்சி மேற்கு திரையில் நகர்ந்து தற்போது மன்னார் வலைகுடாவை ஒட்டியுள்ள பகுதிகளில் நிலை கெண்டுள்ளதால் கடலில் காற்றின் வேகம் அதிகரித்துள்ளது. இதனால் மீனவர்கள் கடந்த நான்கு நாட்களாக கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வில்லை. ராமேஸ்வரம், கோட்டைபட்டினம், ஜெகதாப்பட்டினம், புதுவை மீனவர்கள் தங்களின் விசை படகுகளை கடற்கரை பகுதியில் நிறுத்தியுள்ளனர். சென்னை காசிமேடு மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லாததால் மீன் வரத்து குறைந்துள்ளது.
Dis : Fishermen have not gone to sea for fishing for the past three days due to heavy rain and wind speed