பெங்களூர் மாநகராட்சி மற்றும் கர்நாடக மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் கெடுபிடிகளை கண்டித்து நகரிலுள்ள அடுக்குமாடி குடியிருப்புவாசிகள் மனித சங்கிலி போராட்டம் நடத்தினர்.
பெங்களூரில் தொழில் வளர்ச்சி அதிகரித்ததை தொடர்ந்து அடுக்குமாடி குடியிருப்புகள் அதி வேகத்தில் பெருகின. பணி மற்றும் தொழில்நிமித்தமாக பெங்களூரில் வசிக்கும் தமிழகத்தை சேர்ந்த மக்களுக்கு இதுபோன்ற அடுக்குமாடி குடியிருப்புகள்தான் சொந்த வீட்டு ஆசையை நிறைவேற்றி வருகின்றன.
பெங்களூரிலுள்ள பெரும்பாலான அப்பார்ட்மென்டுகளில் கணிசமாக தமிழக மக்கள் வசிக்கிறார்கள்.இந்த நிலையில் அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் கடும் கெடுபிடிகளை விதிக்க தொடங்கியுள்ளனர். இதுகுறித்து பெங்களூர் அப்பார்ட்மென்ட் கூட்டமைப்பு (BAF) தலைவர் ஆர்.பாலசுப்பிரமணியன் கூறுகையில், "1970, 1980கள் மற்றும் 1990களில் கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகள் மாசு ஏற்படுத்தவில்லை என்றாலும் கூட அங்கும் கட்டாயமாக கழிவுநீர் சுத்திகரிப்பு பிரிவுகளை (STPs) அமைக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்துகிறார்கள். இது சாத்தியமில்லாதது.
இந்த நிலையில் அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் கடும் கெடுபிடிகளை விதிக்க தொடங்கியுள்ளனர். இதுகுறித்து பெங்களூர் அப்பார்ட்மென்ட் கூட்டமைப்பு (BAF) தலைவர் ஆர்.பாலசுப்பிரமணியன் கூறுகையில், "1970, 1980கள் மற்றும் 1990களில் கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகள் மாசு ஏற்படுத்தவில்லை என்றாலும் கூட அங்கும் கட்டாயமாக கழிவுநீர் சுத்திகரிப்பு பிரிவுகளை (STPs) அமைக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்துகிறார்கள். இது சாத்தியமில்லாதது.
Apartment dwellers across Bengaluru city took out a silent rally on Saturday against harassment by officials over installation of STPs