Skip to playerSkip to main content
  • 9 years ago
சிம்புவுக்கும், ஓவியாவுக்கும் ரகசியமாக திருமணமாகிவிட்டதாகக் கூறு போலி புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றபோது ஆரவை மனதார காதலித்தார் ஓவியா. ஆனால் ஆரவ் அவரின் காதலை ஏற்கவில்லை. ஆரவின் மனம் மாறும் என்று காத்திருந்த ஓவியா பின்னர் தன் மனதை மாற்றிக் கொண்டார். பின்னர் சிங்கிளாக நிம்மதியாக இருப்பதாக தெரிவித்தார் ஓவியா. சிம்பு இசையில் ஓவியா மரண மட்டை பாடலை பாடியிரு்தார். இதையடுத்து சிம்பு, ஓவியா சேர்ந்து எடுத்த புகைப்படம் வெளியாகி வைரலானது. ஓவியாவின் பாடலை அவரது ஆர்மிக்காரர்கள் ஹிட்டாக்கினர். சிம்புவுடன் ஓவியா பணியாற்றியுள்ள நிலையில் அவர்கள் இருவரும் ரகசிய திருமணம் செய்து கொண்டதாக ஒரு புகைப்படம் வெளியாகி வைரலாகியுள்ளது. புகைப்படத்தை பார்த்த உடனே அது போலி என்று தெளிவாகத் தெரிகிறது. இது நம்ம ஆளு பட புகைப்படத்தை மாற்றி பயன்படுத்தியுள்ளனர். இருப்பினும் சிலர் பொய்யான தகவலை பரப்பிக் கொண்டிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

It has been reported that simbu and bigboss star oviya got married secretly. A heavily photoshoppd fake picture has been doing the rounds on internet. A lot of people took it for a real picture and started spreading the rumour about them.

Category

🗞
News

Recommended