உலக தங்க உற்பத்தியில் தென்னாப்பிரிக்கா முக்கியமான இடத்தில் இருக்கிறது. ஒவ்வொரு வருடமும் மிகவும் அதிக அளவில் தங்க உற்பத்தி செய்து வருகிறார்கள். அதே சமயத்தில் அந்த நாடு பாதுகாப்பிற்கும் கேள்வி குறியான ஒன்று. இங்கு இருக்கும் பல சுரங்கங்கள் மிகவும் மோசமான நிலையில் இருக்கிறது. அப்படிப்பட்ட சுரங்கம் ஒன்றில் 950க்கும் அதிகமான பணியாளர்கள் மாட்டி இருக்கிறார்கள். இவர்களை மீட்க போராட்டம் நடந்து வருகிறது.
அங்கு இருக்கும் வெல்கம் டவுன் என்ற பகுதியில் உள்ள சுரங்கம் ஒன்றில் இந்த சம்பவம் நடந்துள்ளது. 3,280 அடி ஆழம் இருக்கும் சுரங்கத்தில் பணியாளர்கள் மாட்டி உள்ளனர். புதன் கிழமை இரவில் இருந்து பணியாளர்கள் மாட்டியுள்ளனர்.

அங்கு இருக்கும் பணியாள்கள் ஒவ்வொரு நபராக மீட்கப்பட்டு வருகிறார்கள். ஒரே சமயத்தில் ஒருவருக்கு மேல் மீட்கப்பட முடியவில்லை. மின்சாரம் வரவும் நாளை வரை ஆகும் எனப்படுகிறது. இதனால் மீட்பு பணியில் பெரிய தொய்வு ஏற்பட்டுள்ளது.
950 Gold mining workers trapped underground in South Africa. Nearly 650 workers were rescued from the underground.