Skip to playerSkip to main content
  • 9 years ago
பக்கோடா விற்பனை செய்வது தவறு அல்ல, சுயவேலைவாய்ப்பு என்பது சிறப்பான விஷயம் என்று மோடி, அமித்ஷாவின் பக்கோடா கமென்ட்டுக்கு அமைச்சர் ஜெயக்குமார் ஆதரவு தெரிவித்துள்ளார். வேலைவாய்ப்பு பெருகவில்லையே என்ற டிவி சேனல் ஒன்றின்கேள்விக்கு சமீபத்தில் பதிலளித்த பிரதமர் மோடி, பக்கோடா விற்றால் கூட நாளொன்றுக்கு ரூ.200 சம்பாதிக்கலாம். அது வேலைவாய்ப்பு இல்லை என்பீர்களா என கூறியுள்ளார்.

இதுபோல் எம்பியான பிறகு முதல்முறையாக நேற்றைய தினம் லோக்சபாவில் அமித்ஷா பேசினார். அப்போது அவர் கூறுகையில் வேலை இல்லாமல் இருப்பதற்கு பக்கோடா விற்பது எவ்வளவோ மேல் என்று கூறியுள்ளார்.

TN Minister Jayakumar says about Pakoda selling is self employment. Youngsters can sell Mushroom decorative colour fishes etc.

Category

🗞
News

Recommended