தமிழ் சினிமாவில் எப்போதுமே நாயகிகளுக்கு சம்பளம் குறைவு என்ற புலம்பல்கள் உண்டு. ஆனால் இன்றைக்கு அது வெகுவாகக் குறைந்திருக்கிறது. புதுமுக நாயகிகளுக்கு இன்னும் சம்பளம் ஒரு பெரிய பிரச்சினைதான். அட்ஜெஸ்ட்மென்டைப் பொறுத்தே அது முடிவாகிறது. ஆனால் பெரிய நாயகிகளின் சம்பளம், ஹீரோக்களுக்கு இணையாக உயர்ந்துவிட்டது. புதிய சம்பள பட்டியல் விகிதத்தில் நயன்தாராவும் அனுஷ்காவும் முதல் இடத்தில் இருக்கிறார்கள். இவர்கள் சம்பளம் ரூ.5 கோடியாக உயர்ந்து இருக்கிறது. சாதாரணமாக அறிமுகமான நயன்தாரா ஆரம்பத்தில் ரூ.1 கோடி சம்பளம் வாங்கினார். அதன் பிறகு அவரது படங்கள் வெற்றி பெற்றதால் ரூ.2 கோடியாக உயர்ந்தது. கதாநாயகன் இல்லாத அறம் படத்தில் கலெக்டர் கதாபாத்திரத்தில் நடித்தார். அந்த படமும் வெற்றி பெற்றது. தற்போது அவர் கைவசம் இமைக்கா நொடிகள், கொலையுதிர் காலம், கோலமாவு கோகிலா ஆகிய படங்கள் உள்ளன. தெலுங்கு படமொன்றிலும் நடிக்கிறார். அஜித்குமார் ஜோடியாக விசுவாசம் படத்துக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளார். இந்த படத்துக்கு அவருக்கு ரூ.5 கோடி சம்பளம் பேசப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
Here is the list of heroines salaries in Tamil cinema