Skip to playerSkip to main content
  • 9 years ago
அஜீத்தின் விசுவாசம் படத்திற்கு இசையமைக்கப் போவது யார் என்பது தெரிய வந்துள்ளது. சிவா இயக்கத்தில் அஜீத் நான்காவது முறையாக நடிக்கும் படம் விசுவாசம். இந்த படத்தில் அஜீத் ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். இது அஜீத், நயன்தாரா சேர்ந்து நடிக்கும் நான்காவது படம். இந்த படம் கண்டிப்பாக வெற்றியடைய வேண்டும் என்று தல ரசிகர்கள் பிரார்த்தனை செய்கிறார்கள். வேதாளம், விவேகம் ஆகிய படங்களுக்கு அனிருத் தான் இசையமைத்தார். இந்நிலையில் விசுவாசத்திற்கும் அவரே இசையமைப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. விசுவாசம் படத்திற்கும் அனிருத் தான் இசையமைப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இமான் இசையமைக்கிறார் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. விசுவாசம் சுமாராகப் போனால் எங்கே அஜீத் மீண்டும் சிவா இயக்கத்தில் நடித்துவிடுவாரோ என்ற பயத்தில் தான் தல ரசிகர்கள் தற்போதே இறைவனிடம் பிரார்த்தனை செய்யத் துவங்கிவிட்டனர்.

D. Imman is the music director of Ajith's upcoming movie Viswasam to be directed by Siva. Anirudh was expected to join hands with Siva and Ajith again.

Category

🗞
News

Recommended