ஆதீன மடத்திற்குள் நித்யானந்தா நுழைய கூடாது என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதற்கு மதுரை ஆதீனம் வரவேற்றுள்ளார்.
ஆதினங்களுக்கு உட்பட்ட கோவில்களுக்குள் செல்ல நித்தியானந்தாவுக்கு சென்னை உயர்நீதி மன்ற மதுரை கிளை தடை விதித்து அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.அதன்படி இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதி மகாதேவன் ஆதினங்களுக்கு உட்பட்ட கோவில்களுக்குள் செல்ல நித்தியானந்தாவுக்கு தடை விதித்ததுடன் மதுரை ஆதீன மடத்துக்குள் நித்யானந்தா நுழையவும் தடை விதித்துள்ளார் மேலும், முறைகேட்டில் ஈடுபடும் மடாதிபதிகள் மீது அரசு நடவடிக்கை எடுக்கவும் நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. மேலும் இந்த வழக்கு தொடர்பாக 8வாரங்களுக்குள் அரசு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய மதுரை ஆதினம் நீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்பதாகவும் சிவ பெருமானுடைய அருளுடன் மதுரை ஆதினத்தின் வாரிசாக இளைஞர்கள்வரலாம் என்றும் இனி என்ன முயற்சி செய்தாலும் நித்யானந்தவால் ஆதீன கோவில்களுக்குள் நுழைய முடியாது என்றும் தெரிவித்தார்.
Madurai Adityan has welcomed the court order not to enter Nithyananda into the Madina.