புதிய அரசு பேருந்து ஒன்று மீண்டும் பழுதாகி நடுவழியில் நின்றுவிட்டதால் பயணிகள் கடும் அவதிக்கு ஆளானார்கள். கடந்த சில நாட்களுக்கு முன் தமிழகம் முழுவதும் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட புதிய அரசு பேருந்துகள் அறிமுகம் செய்யப்பட்டன. இதில் 515 புதிய அரசு சொகுசு பேருந்து சேவையை முதல்வர் பழனிசாமி ஜூலை 2-ம் தேதி தொடங்கி வைத்தார். அரசு விரைவு போக்குவரத்துக்கழக வரலாற்றில் முதல்முறையாக ரூ.314 கோடி செல்வில் தயாரான இந்த பேருந்துகளில், குளிர்சாதன, படுக்கை வசதிகள், கழிப்பறை ஜிபிஎஸ், சிசிடிவி கேமரா வசதிகள் கொண்டு செய்யப்பட்டுள்ளன.
New government bus damaged near Thiruvarur