தேர்தல் எப்போது வந்தாலும் அதிமுக சந்திக்க தயாராக உள்ளதாக அமைச்சர் செல்லூர் ராஜீ தெரிவித்துள்ளார்.
மதுரையில் அதிமுக செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டத்தில் அமைச்சர் செல்லூர் ராஜீ கலந்து கொண்டார். அப்போது அதிமுக ஆட்சியால் மதுரை வளர்ச்சி பெற்ற நகரமாக மாறி வருகிறது என்றார். தேர்தல் நேரங்களில் தான் கூட்டணி .அதற்க்கு முன் எது வேண்டுமானாலும் நடக்கலாம் என்றதுடன் மத்திய அரசு தமிழக அரசு கேட்க கூடிய திட்டங்களை எல்லாம் தருகிறார்கள் என்றதுடன் பிஜேபி யோடு இனக்கமாக உள்ளோம் என்று கூறினார். தேர்தல் எப்போது வந்தாலும் அதிமுகவை பொறுத்தவரையில் சந்திக்கும் கட்சியாக உள்ளது என்று அமைச்சர் தெரிவித்தார்.
Des : Minister Seloor Raji said the AIADMK is ready to meet whenever the election comes.