சி பிரிவில் நடந்த ஆட்டத்தில் டென்மார்க் - ஆஸ்திரேலியா அணிகள் மோதின. இந்த போட்டியில் இரு அணிகளும் தலா ஒரு கோல் அடித்ததால் ஆட்டம் டிராவில் முடிந்தது. இதனையடுத்து நடைபெற்ற 2வது போட்டியில் பெரு மற்றும் பிரான்ஸ் அணிகள் மோதின. இதில் பெருவை 1-0 என்ற கோல் கணக்கில் வென்று முன்னாள் சாம்பியனான பிரான்ஸ் அடுத்தச் சுற்றுக்கு முன்னேறியது. இரண்டு தோல்விகளுடன் பெரு அணி தொடரில் இருந்து வெளியேறியது. கடைசியாக நடைபெற்ற போட்டியில் குரோஷியாவுடன் - அர்ஜெண்டினா மோதியது. முதல் பாதியில் இரு அணிகளும் கோல் போட எடுத்த முயற்சி பலனளிக்கவில்லை. 2வது பாதியில் தாக்குதல் ஆட்டத்தில் ஈடுபட்ட குரோஷியா வீரர்கள் அடுத்தடுத்து கோல்கள் அடித்தனர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மெஸ்ஸி இந்த முறையும் ஏமாற்றியதால் அர்ஜெண்டினா தோல்வியை தழுவியது. 3க்கு 0 என்ற கோல் கணக்கில் குரோஷியா வெற்றி பெற்று தனது இருப்பை தக்க வைத்தது
Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV