Skip to playerSkip to main content
  • 8 years ago
செய்தித்தாள்களை படித்து விட்டு மண்ணில் போட்டு நீர் ஊற்றினால் சில தினங்களில் தானாக செடியாக அல்லது சிறிய தாவரமாக வளர்ந்து விடும். இதை நம்ப முடியவில்லையா? ஆனால் உண்மை. ஜப்பான் நாட்டின் மைனிச்சி நிறுவனம், செய்தித்தாள்களில் இருந்து செடிகள் வளரும் வகையிலான புதிய காதித்தை தயாரித்துள்ளது. வாருங்கள் இது குறித்த ஒரு செய்தி தொகுப்பை பார்க்கலாம்...

பெரும்பாலும் எல்லா நாடுகளிலும் மரம், கரும்புச்சக்கை, மூங்கில், வைக்கோல் ஆகியவற்றை மூலப்பொருளாகக் கொண்டே காகிதம் தயாரிக்கப்படுகிறது. மரத்தை வெட்டி, அதை கூழாக்கி காகிதம் தயாரிக்கும் முறையே அதிகம் பின்பற்றப்படுகிறது. காகித தயாரிப்புக்காக மரங்கள் வெட்டப்படுவதால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதாக வன ஆர்வலர்கள் எதிர்ப்புக் குரல் எழுப்பியதால், மாற்று வழியில் காகிதம் தயாரிக்கும் ஆராய்ச்சிகள் உலக அளவில் நடந்தன. இதன் விளைவாக, மறுசுழற்சி காகித தயாரிப்பு தொழில்நுட்பம் உருவானது. இதன் தொடர்ச்சியாக, செய்தித்தாள்களில் இருந்து செடிகள் வளரும் வகையிலான புதிய காகிதம் தயாரிப்பு தொழில் நுட்பம் பிறந்துள்ளது.
ஆம், ஜப்பான் நாட்டில் "தி மைனிச்சி" (The mainichi) என்ற பிரபல நாளிதழ் ஒன்று இயங்கி வருகிறது. அதிகமாக விற்பனையாகும் இந்த நாளிதழ், புதிய தொழில் நுட்பம் ஒன்றை கண்டுபிடித்து அதனை செயல்படுத்தி வருகிறது. பல செடிகளின் விதைகளை கலந்து இந்த நிறுவனம் காகிதம் தயாரிக்கிறது. அந்த காகிதங்களையே நாளிதழ் அச்சிக்கு பயன்படுத்துகிறது. மேலும், காகிதம் அச்சிடும் போது ரசாயன மைகளால் செடிகளின் விதைகள் பாதிக்கப்படுவதை தடுப்பதற்காக, இயற்கை முறையில் தயாரிக்கப் பட்ட மையை இந்த நிறுவனம் பயன்படுத்தியது. இதன் மூலம் உலகின் முதல் பசுமையான நவீன செய்தித்தாள் என்ற பெருமையை பெற்றுள்ள இந்த நாளிதழ் நாள் ஒன்றுக்கு 40 லட்சம் பிரதிகள் விற்பனை செய்து, நாள் ஒன்றுக்கு 7 லட்சம் டாலர் வருமானத்தை ஈட்டுகிறது. இந்த செய்தித்தாள்களை படித்து விட்டு மண்ணில் புதைத்து நீர் ஊற்றினால், சில தினங்களில் தானாக செடியாக அல்லது சிறிய தாவரமாக முளைத்து வளருகிறது..

Connect with Sathiyam TV online: http://sathiyam.tv

Facebook: https://www.fb.com/SathiyamNEWS

Twitter: https://twitter.com/SathiyamNEWS

Website: http://www.sathiyam.tv

Google+: http://google.com/+SathiyamTV

Category

🗞
News

Recommended