நாடாளுமன்றம் என்னும் கிணற்றில் பழைய தவளைகள் இருப்பதாக மக்கள் நீதி மய்யக் கட்சி தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார். சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் பாடல்கள் வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் கலந்துகொண்டு பேசிய மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், தான் பெரியாருக்கு எந்த அளவிற்கு ரசிகனோ, அதே அளவிற்கு காந்திக்கும் ரசிகன் எனக் கூறினார். மேலும், இன்னொரு மகாத்மா காந்தியை நாடாளுமன்றத்தில் தேடவேண்டாம் எனக் கூறிய கமல், மகாத்மாக்கள் சாலையில் பாதசாரிகளாக நடந்து சென்று கொண்டிருப்பார்கள் என தெரிவித்தார். நாடாளுமன்ற கிணற்றில் பழைய தவளைகள் இருப்பதாகவும் கமல் தெரிவித்தார். ஓட்டுக்காக வாக்காளர்களுக்கு பணம் அளிக்கப்படுவதையும் கமல்ஹாசன் கடுமையாக விமர்சித்தார். இனி வரும் காலங்களில் மலர்மாலை மற்றும் பொன்னாடைகளை தவிர்க்கவேண்டும் எனவும் கமல்ஹாசன் வேண்டுகோள் விடுத்தார்.
Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV