இலங்கையின் வடக்குப் பகுதியில் உள்ள ஈழத்தின் ஒரு பகுதியான மன்னார் மாவட்டத்தில் லங்கா
சதொச எனும் சூப்பர் மார்க்கெட் இயங்கி வருகிறது. இந்நிலையில் இந்த கட்டிடத்தை இடித்து அகழ்வு செய்யப்பட்டது. அப்போது, எலும்புக்கூடுகள் ஒவ்வொன்றாக கண்டெடுக்கப்பட்டுள்ளது. கடந்த 25 நாட்களாக விட்டுவிட்டு நடைபெறும் அகழ்வு பணியில் இதுவரை 30 எலும்புக் கூடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. மாவட்ட நீதிபதி, காவல் மற்றும் ராணுவ அதிகாரிகளின் முன்னிலையில் இந்த அகழ்வு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கண்டெடுக்கப்பட்ட எலும்புக்கூடுகளைக் கொண்டு, இறந்தவர்களின் அடையாளங்களைக் காண முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது
Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV