பிரசவ காலத்தில் தாய்மார்களின் உயிரிழப்பை குறைக்கும் மாநிலங்களுக்கு "பிரதம மந்திரியின் பாதுகாப்பான மகப்பேறு திட்டம்" மூலம் ஆண்டுதோறும் விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு இந்த திட்டத்தின் கீழ் கேரளா, மகாராஷ்டிரா மற்றும் தமிழ்நாடு ஆகிய 3 மாநிலங்கள் 2014-16 வரை பிரசவ காலத்தில் தாய்மார்களின் இறப்பு விகிதத்தை வெகுவாக குறைத்துள்ளது. இதற்கான விருதுகள் வழங்கும் விழா டெல்லியில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி.நட்டா தலைமையில் நடைபெற்றது. இதில் தமிழகம் சார்பில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கலந்து கொண்டு தமிழகத்துக்கான விருதை பெற்றுக்கொண்டார். தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க ஒப்புதல் அளித்ததற்காக மத்திய சுகாதாதரத் துறை அமைச்சர் ஜே.பி. நட்டாவை சந்தித்து அமைச்சர் விஜயபாஸ்கர் நன்றி தெரிவித்தார். இந்நிகழ்ச்சியின் போது சுகாதாரத்துறை முதன்மைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் உடன் இருந்தார்.
Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV