புதுச்சேரி காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் மகளிர் காங்கிரசிற்கான செயலியை புதுச்சேரி பொறுப்பாளர் நடிகை நக்மா அறிமுகம் செய்தார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த நக்மா, GST யால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால் அதனை அறிமுகப்படுத்திய நாளை துக்க தினமாக கருதி 2 நிமிடம் அஞ்சலி செலுத்த வேண்டூம் என்றார். பணமதிப்பிழபிற்கு பின் தீவிரவாதம் ஒழியும் என மத்திய அரசு பொய் பிரச்சாரம் செய்ததாகவும், தற்போது தீவிரவாதம் அதிகரித்து குழந்தைகளுக்கும் பெண்களுக்கும் பாதுகாப்பில்லை ஏற்பட்டுள்ளதாக குற்றம்சாட்டினார். சுவீஸ் வங்கியில் இருந்து கருப்பு பணத்தை மீட்போம் என பாஜக அரசு உறுதியளித்தது என்றும். ஆனால் பாஜக ஆட்சியில் தான் இது கருப்பு பணம் பதுக்கல் பல மடங்காக உயர்ந்துள்ளது என்றும் தெரிவித்தார்
Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV