உலக கோப்பை கால்பந்து போட்டியில் நேற்று முன்தினம் நடந்த மெக்சிகோவிற்கு எதிரான நாக் அவுட் சுற்று போட்டியில் நெய்மருக்கு லேசான காயம் ஏற்பட்டது. அப்போது, வலது காலை பிடித்துகொண்டு உருண்டு, புரண்டு அலறினார். சில நிமிடங்களுக்கு பிறகு சகஜநிலைக்கு திரும்பிய அவர், பிறகு ஆட்டம் முழுவதும் விளையாடினார். நெய்மர் உணர்ச்சிகளை வெளிக்காட்டிய விதம் கொஞ்சம் மிகைப்படுத்தும் வகையில் இருந்ததாக சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் கிளம்பியுள்ளன. இந்நிலையில், மெக்சிகோ அணியின் பயிற்சியாளர் ஜூவான் கார்லஸ், உண்மையிலேயே இது கால்பந்து விளையாட்டுக்கு அவமானமானது என கூறியுள்ளார்
Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV