தூத்துக்குடியில் நடந்த கலவரம், துப்பாக்கிச் சூடு அடுத்து மே மாதம் 28-ஆம் தேதி ஸ்டெர்லைட் ஆலை மூடி சீல் வைக்கப்பட்டது. அதனை தொடர்ந்து ஆலையில் இருந்து கந்தக அமிலம் கசிவு ஏற்பட்டதை அடுத்து ஆலையில் இருந்து 2 ஆயிரத்து 124 டன் கந்தக அமிலம் அகற்றப்பட்டது. பின்னர் ஆலையில் உள்ள மற்ற ரசாயனங்கள் குறித்த விவரங்களை சேகரிப்பதற்காக அமைக்கப்பட்ட குழு தீவிர ஆய்வு மேற்கொண்டு அறிக்கை அளித்தது. அதனடிப்படையில் ஸ்டெர்லைட் ஆலையில் உள்ள அனைத்து ரசாயனங்களையும் அகற்றும் பணி 12 வது நாளாக நடைபெற்று வருகிறது. 3 ஆயிரத்து 200 மெட்ரிக் டன் கந்தக அமிலம், 410 மெட்ரிக் டன் பாஸ்பரிக் அமிலம், 9 ஆயிரம் மெட்ரிக் டன் ஜிப்சமும், ராக் பாஸ்பேட் 250 மெட்ரிக் டன், சில்லி சிக் அமிலம் 21 மெட்ரிக் டன்னும் வெளியேற்றி உள்ளதாக மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார். உயர்மட்ட நிபுணர் குழு அறிவுறுத்தலின் படி 30 நாட்களில் முடிக்க தமிழக அரசு அறிவுறுத்தி உள்ளதாகவும், அதனடிப்படையில் மாவட்ட நிர்வாகம் செயல்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.
ஸ்டெர்லைட் ஆலைக்கு டீசல் ஜெனரேட்டர் மூலம் மின்சார வசதி செய்து கொடுத்துள்ளதாக ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்தார்
Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV