8 வழி பசுமைச்சாலை திட்டத்தை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தருமபுரியை சேர்ந்த நில உரிமையாளர் கிருஷ்ணமூர்த்தி என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார். அதில் 8 வழி பசுமைச்சாலை திட்டத்திற்கு சுற்றுச்சூழல் ஆய்வு மேற்கொள்ளாமல் நிலத்தை கையகப்படுத்தும் பணிகளை மேற்கொள்ள தடை விதிக்க வேண்டும் என கோரியிருந்தார். இந்த வழக்கில் பசுமை வழிச்சாலை திட்ட இயக்குனர் தாக்கல் செய்த பதில் மனுவில், சென்னையில் இருந்து மேற்கு மாவட்டங்கள் செல்லும் இரண்டு வழி சாலைகளில் போக்குவரத்து நெரிசலை தடுக்கவே பசுமை வழிச் சாலை திட்டம் கொண்டு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலமாக ஆண்டுக்கு சுமார் 700 கோடி ரூபாய் அளவிற்கு எரிபொருள் செலவு மிச்சப் படுத்தப்படும், அவசர காலங்களில் திருவண்ணாமலை, தருமபுரி மாவட்ட மக்கள் சென்னை அல்லது சேலத்திற்கு மருத்துவ வசதியை பெற முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சுற்றுச்சூழல் பாதிப்பு தொடர்பாக சுற்றுச்சூழல் அறிஞர்கள் மற்றும் பொறியியல் துறை நிபுணர்கள் ஆய்வு மேற்கொண்டு வருவதாகவும், சுற்றுச்சூழல் ஒப்புதல் பெறுவதற்கு மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறையிடம் அனுமதி கேட்கப்பட்டதையடுத்து நிபுணர்கள் குழு சில நிபந்தனைகளை பரிந்துரைத்துள்ளதாக பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிபந்தனைகளுக்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளதாக பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது
Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV