சேலம் மாவட்டத்தில் 8 வழி பசுமைச்சாலை அமைய உள்ள பாரப்பட்டி, கூமாங்காடு கிராமத்தை சேர்ந்த விவசாயிகளை சந்தித்து நல்லக்கண்ணு கருத்து கேட்டறிந்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், எட்டு வழிச்சாலை திட்டத்திற்கு சட்டவிரோதமாக நிலம் கையகப்படுத்துவதை இறுதிவரை எதிர்த்து போராடுவோம் என தெரிவித்தார். மக்கள் உரிமைக்காக தான் போராடுகின்றனர் என்றும் யாரும் அவர்களை தூண்டி விடவில்லை என தெரிவித்த நல்லக்கண்ணு, போராட்டம் நடத்துபவர்கள் தேச விரோதிகள் என்று சொல்வது மிகவும் ஆபத்தானது என்று கூறினார். மக்கள் பாதிக்கப்படும் போது அவர்களுக்கு துணையாக இருக்க வேண்டியது அரசியல் கட்சியின் கடமை என்றும் அவர் குறிப்பிட்டார்
Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV