Skip to playerSkip to main content
  • 8 years ago
கர்நாடகா மாநிலம் கபினி மற்றும் கே.ஆர்.எஸ் அணைகளில் நீர் பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இதனால் அணைகளில் நீர் மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. இந்நிலையில் கே.ஆர்.எஸ் அணையின் முழு கொள்ளளவான 124.80 அடியில், 123.65 அடியை எட்டியுள்ளது. இதனால் கே.ஆர்.எஸ் அணையில் இருந்து வினாடிக்கு 65 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்ட நிலையில், திடீரென 73 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டது. மேலும் கபினி அணையில் இருந்து வினாடிக்கு 35 ஆயிரம் கன அடி என கர்நாடகாவின் இரு அணைகளில் இருந்தும் மொத்தமாக வினாடிக்கு ஒரு லட்சத்து 8 ஆயிரம் கன அடி நீர் காவிரி ஆற்றில் வெளியேற்றப்படுகிறது. இதனால் காவிரி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. காவிரி ஆற்றின் கரையோரம் யாரும் செல்ல கூடாது என்றும் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு மீண்டும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் 7 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது

Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV

Category

🗞
News

Recommended