Skip to playerSkip to main content
  • 8 years ago
கள்ளத்துப்பாக்கியுடன் வந்த முன்னாள் கவுன்சிலர் உறவினர் கைது அவனியாபுரம் போலீஸார் விசாரணை.

மதுரை காமராஜபுரம் பகுதியை சேர்ந்தவர் V. K. குருசாமி இவர் மதுரை மாநகராட்சி கிழக்கு மண்டல தலைவராக இருந்தவர், இவருக்கும் இதே பகுதியை சேர்ந்த ராஜ பாண்டி என்பவகுக்கும் ஏற்பட்ட மோதலில் இதுவரை 20க்கும் மேற்பட்டோர் பழிக்கு பழியாக் கொலை செய்யப்பட்டனர். இந்நிலையில் V. K. குருசாமியின் தங்கை மகன் காளிஸ்வரன், வில்லாபுரம் 3 மாடி குடியிருப்பு பகுதியில் பதுங்கியுள்ளதாக தகவல் வந்தது. இதனைwடுத்து அவனியாபுரம் போலீஸார் வீடுகளில் சோதனை செய்த போது காளிஸ்வரன் ஒரு வீட்டில் பதுங்கி இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. வீட்டின் வெளிபுறம் பூட்டி உள்ளே காளிஸ்வரன் பதுங்கி இருந்தது தெரிய வந்தது. S.Iகள் திலிபன், சண்முகநாதன் பூட்டை உடைத்து காளிஸ்வரனை கைது செய்தனர். அவரிடமிருந்து கள்ளத்துப்பாக்கியை பறிமுதல் செய்தனர். காளிஸ்வரம் வரன் மீது 6 கொலை வழக்குகள் உள்பட பல்வேறு வழக்குகள் உள்ளது.நீண்ட நாளாக தேடப்பட்டு வந்த காளிஸ்வரன் தற்போது குஜராத்தில் இருந்து மதுரை வந்ததாக தெரிகிறது. கைப்பற்றப்பட்ட துப்பாக்கி பீகாரில் வாங்கியதாக போலீஸார் விசாரணையில் தெரிகிறது.மேலும் விவரங்களை போலீஸார் விசராணை செய்து வருகின்றனர்.

Category

🗞
News

Recommended