#Irulargal #ChennaiRain #Rain2021 #Chennai #Manali #Sadayankuppam #Irulas #Tribes #TribePeople #Tamilnadu #Kuravas #JaiBhim
ஆந்திர மாநிலத்தில் கடந்த வாரம் பெய்த கனமழையால் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பூண்டி ஏரிக்கு நீர் வரத்து வினாடிக்கு 42 ஆயிரம் கனஅடியாக உயர்ந்தது. ஏரி முழு கொள்ளளவை எட்டும் நிலையில், ஏரியில் இருந்து வினாடிக்கு 35 ஆயிரம் கனஅடிக்கு மேல் உபரிநீர் திறந்துவிடப்பட்டது. இதனால் கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதன் விளைவாக சென்னை மணலி புதுநகர் பகுதியில் குடியிருப்புகளை வெள்ளநீர் சூழ்ந்தது. குறிப்பாக சடையன்குப்பம் இருளர் காலனி பகுதியில் அனைத்து வீடுகளையும் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. அதன் காரணமாக அப்பகுதியில் வசிப்போர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மழை பெய்யும்போதெல்லாம் இவ்வாறு சிரமப்படுவதாகவும், தங்களுக்கு அரசு நிரந்தர வீடு கட்டித்தர வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Video By : ச.கார்த்திகேயன்