Skip to playerSkip to main content
  • 2 hours ago
மயிலாடுதுறை: ஐப்பசி மாத துலா உற்சவத்தை முன்னிட்டு காவிரி துலா கட்டத்தில் ஏராளமான பக்தர்கள் புனித நீராடி வழிபட்டனர்.  கங்கை முதலான புண்ணிய நதிகள் மயிலாடுதுறை காவிரி துலா கட்டத்தில் புனித நீராடி சிவனை வழிபட்டு தங்களின் பாவ சுமைகளை போக்கிக் கொண்டதாக புராணங்கள் கூறுகின்றன. இதனால் ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் முழுவதும் காவிரி துலா கட்டத்தில் ‘ஐப்பசி மாத துலா உற்சவம்’ கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டும் உற்சவமானது முதல் தீர்த்தவாரியுடன் நேற்று (அக்.18) நடைபெற்றது. துலா உற்சவத்தை முன்னிட்டு மாயூரநாதர், ஐயாரப்பர், வதான்யேஸ்வரர், காசி விஸ்வநாதர் உள்ளிட்ட சிவாலயங்களில் இருந்து பஞ்ச மூர்த்திகள் காவிரியின் இரு கரைகளிலும் எழுந்தருளினர். அஸ்திர தேவர்களுக்கு பால், பன்னீர், தேன், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் மற்றும் ஆராதனை செய்யப்பட்டு தீர்த்தவாரி உற்சவம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று காவிரியில் புனித நீராடி வழிபாடு செய்தனர். நவம்பர் 7-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய விழாவானது 10 நாள் உற்சவமாக நடைபெறுகிறது. அதனைத் தொடர்ந்து நவம்பர் 8ஆம் தேதி அமாவாசை தீர்த்தவாரி உற்சவமும், 11ஆம் தேதி சகோபுர தரிசனமும், 13ஆம் தேதி திருக்கல்யாணமும், 15ஆம் தேதி திருத்தேர் நிகழ்வும், விழாவின் சிகர நிகழ்வாக நவம்பர் 16-ஆம் தேதி கடை முக தீர்த்தவாரி உற்சவமும் நடைபெற உள்ளது.

Category

🗞
News
Transcript
00:00Thank you very much.
00:39Thank you very much.

Recommended