Skip to playerSkip to main content
  • 7 hours ago
ராமநாதபுரம்: பாம்பன் மீனவர் ஒருவரின் வலையில், விலை உயர்ந்த கூறல் மீன்கள் சிக்கியதால், அவருக்கு ஜாக்பாட் அடுத்ததாக மற்ற மீனவர்கள் தெரிவித்தனர். அந்த மூன்று மீன்களும் சுமார் 2 லட்சம் ரூபாய் மதிப்பிலானவை எனக் கூறப்படுகிறது.ராமநாதபுரம் மாவட்டம் பாம்பனில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்கச் சென்று திரும்பிய மீனவர் ஒருவரின் வலையில் அபூர்வ வகையான விலை உயர்ந்த 3 கூறல் மீன்கள் சிக்கின. இந்த மூன்று கூறல் மீன்களும் சுமார் 2 லட்சம் ரூபாய் மதிப்புடையவை என்பதால், அந்த மீனவர் மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்ந்தார்.இது இந்தோ-பசிபிக் கடற்பகுதியில் காணப்படும் ஒரு மிகச் சிறிய மற்றும் மிகவும் விலையுயர்ந்த அரிய வகை கடல் மீன். கூறல் மீன்களின் வயிற்றுப் பகுதியில் உள்ள பொருள் மருத்துவ குணம் உடையதாகக் கருதப்படுவதால், இதனை 'கடல் தங்கம்' என்றும் மீனவர்கள் அழைக்கின்றனர். இந்த மீன்கள் கடலில் அவ்வளவு எளிதில் கிடைப்பதில்லை. இந்நிலையில், அதிக விலை மதிப்புடைய 3 கூறல் மீன்கள் ஒரே நேரத்தில், வலையில் சிக்கியதால் மீனவருக்கு அதிர்ஷ்டம் அடித்துள்ளது.

Category

🗞
News
Transcript
00:00Thank you for listening.
00:30Thank you for listening.

Recommended