திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பகுதியில் பெய்த கனமழை காரணமாக அடுக்கம் - கொடைக்கானல் சாலையில் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுப் பாறைகளும் மண்ணும் சரிந்து விழுந்தன. இதனால் அப்பாதையில் போக்குவரத்து முற்றிலுமாகப் பாதிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, நெடுஞ்சாலைத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து இயந்திரங்களின் உதவியுடன் பாறைகளையும் மண் சரிவுகளையும் அகற்றித் தற்காலிகச் சீரமைப்புப் பணிகளைப் போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டு வருகின்றனர். சாலையில் தற்காலிகச் சீரமைப்புப் பணிகள் நடைபெற்று வருவதைக் காட்டும் வான்வழி ட்ரோன் (Drone) காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன.
#kodaikanalnews #landslide #landslidedisaster #landslideupdate #tamilnadu For More Local News, Breaking News, Kollywood Movie News & updates and videos from Tamil Nadu, Puducherry, India, and around the world in Tamil Be a Part of Asianet News Network. For More, visit ►►https://tamil.asianetnews.com