Skip to playerSkip to main content
  • 5 minutes ago
மயிலாடுதுறை: காவிரி துலாக்கட்டத்தில் ஐப்பசி மாதம் முழுவதும் நடைபெறும் புகழ்வாய்ந்த துலா உற்சவத்தை முன்னிட்டு சிவாலயங்களில் இன்று திருக்கொடியேற்றம் நடைபெற்றது. கங்கை முதலான புண்ணிய நதிகள் அனைத்தும் தங்கள் பாவ சுமைகளை போக்கிக் கொள்ள மயிலாடுதுறை காவிரி துலாக்கட்டத்தில் புனித நீராடியதாக புராணம் கூறுகிறது. இதனால் காவிரி துலாக்கட்டத்தில் ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் முழுவதும், தினமும் மயிலாடுதுறை மயூரநாதர் ஆலயத்திலிருந்து சுவாமி புறப்பட்டு, காவிரி துலாக்கட்டத்தில் தீர்த்தவாரி நடைபெறுவது வழக்கம். அதோடு, ஐப்பசி 1-ஆம் தேதி முதல் தீர்த்தவாரி நடைபெற்று வருகிறது. மேலும், இந்த ஆண்டு சிவாலயங்களில் 10 நாள் உற்சவம் இன்று திருக்கொடியேற்றத்துடன் இன்று துவங்கியது. மயூரநாதர் ஆலயத்தில் அபயாம்பிகை, சமேத மயூரநாதர் உள்ளிட்ட பஞ்சமூர்த்திகள், கொடிமரத்தின் முன்பு எழுந்தருள செய்து திருவாவடுதுறை ஆதீனம் 24 ஆவது குருமா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் முன்னிலையில் திருக்கொடியேற்றம் நடைபெற்றது. கொடியேற்றத்தை முன்னிட்டு கொடிமரத்திற்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று, பின்னர் பூஜிக்கப்பட்ட புனித நீரால் அபிஷேகம் செய்யப்பட்டு பஞ்ச மூர்த்திகளுக்கு மகா தீபாரதனை நடைபெற்றது. தொடர்ந்து ஆலயத்தை சுற்றி பஞ்ச மூர்த்திகளுக்கான கொடிகள் ஏற்றப்பட்டது. தொடர்ந்து பக்தர்களால் கோயிலுக்கு வழங்கப்பட்ட ஒரு லட்சம் ருத்ராட்சைகளால் செய்யப்பட்ட வெள்ளி ருத்ராட்ச திருமஞ்சத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர். 

Category

🗞
News
Transcript
00:27For more information, visit www.fema.gov
Comments

Recommended