Skip to playerSkip to main content
  • 20 minutes ago
திருப்பத்தூர்: லடாக் பகுதியில் விபத்தில் சிக்கி வீரமரணம் அடைந்த ராணுவ வீரருக்கு தேசியக்கொடி போர்த்தி 21 குண்டுகள் முழங்க ராணுவ மரியாதையுடன் சொந்த ஊரில் உடல் அடக்கம் செய்யப்பட்டது.திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த தாமலேரி முத்தூர் அருகே காந்திநகர் பகுதியில் வசிப்பவர் மனோகரன் மகன் கோவிந்தராஜ். கடந்த எட்டு வருடங்களுக்கு முன்பு ராணுவத்தில் சேர்ந்து டிரான்ஸ்போர்ட் இன்சார்ஜ் மற்றும் துப்பாக்கி இன்ஷார்ஜ் பணியில் ஈடுபட்டு வந்தார்.இவருக்கு கடந்த ஒன்றரை வருடங்களுக்கு முன்பு கிருத்திகா என்கிற பெண்ணுடன் திருமணமாகி ஒரு ஆறு மாத ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில், கடந்த நான்காம் தேதி இந்திய எல்லை பகுதியான கார்கில் அடுத்த லடாக் பகுதியில் பாலம் அமைக்கும் பணியில் ஈடுபட சென்றபோது, சக ராணுவ வீரர்களுடன் அவர் பயணித்த வாகனம், மலை உச்சியிலிருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அதில் கோவிந்தராஜ் சம்பவ இடத்திலேயே வீரமரணம் அடைந்துள்ளார்.தொடர்ந்து நேற்று காலை அவரது உடல் சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டு குடும்பத்தாரிடம் ராணுவ வீரரின் உடல் ஒப்படைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து ராணுவ வீரர்கள் அணிவகுப்பு முடிந்து ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு சுடுகாட்டில் 21 குண்டுகள் முழங்க ராணுவ மரியாதையுடன் அவரின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

Category

🗞
News
Transcript
00:00Thank you for listening.
00:45Thank you for listening.

Recommended