Skip to playerSkip to main content
  • 13 minutes ago
தூத்துக்குடி: குலசேகரன்பட்டினம் தசரா திருவிழாவை முன்னிட்டு 50 அடி உயரத்தில் கருப்பசாமியின் பிரம்மாண்ட உருவம் மற்றும் மஞ்சள், வேப்பிலை அரைத்து அருமருந்து தயாரிக்கும் முத்தாரம்மன் போன்ற உருவத்தையும் வடிவமைத்துள்ளனர். இந்த உருவங்கள் இரவு நேர மின்னொளியில் ஜொலித்ததை பக்தர்கள் கண்டு களித்தனர்.திருச்செந்தூர் அருகேயுள்ள குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயிலில் தசரா திருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் வரும் 20-ஆம் தேதி நள்ளிரவு நடைபெறவுள்ளது.இவ்விழாவிற்காக உடன்குடி அருகே பொதுமக்கள் மற்றும் தசரா குழுவினர் இணைந்து சுமார் 50 அடி உயரத்தில் கருப்பசாமியின் பிரம்மாண்ட உருவத்தை வடிவமைத்துள்ளனர். கையில் அரிவாளுடன் கம்பீரமாகக் காட்சியளிக்கும் கருப்பசாமியின் உருவம், இரவு நேரங்களில் வண்ண மின்னொளியில் ஜொலிப்பது பக்தர்களையும் பொதுமக்களையும் வெகுவாகக் கவர்ந்து வருகிறது.  அதேபோல் முத்தாரம்மன் அம்மியில் மஞ்சள் மற்றும் வேப்பிலையை அரைத்து அருமருந்து தயாரிப்பது போன்ற காட்சியை உருவாக்கியுள்ளனர். இது அம்மனின் அருளையும் பாரம்பரிய நம்பிக்கைகளையும் எடுத்துரைக்கும் வகையில் அமைந்துள்ளது.மேலும், அம்மன் அருகில் நின்று ஒருவர் வேப்பிலையை வைத்துக்கொண்டு ஆடுவது போன்றும், அம்மன் குகைக்குள் இருந்து வெளியே வந்து பக்தர்கள் மீது தண்ணீர் தெளித்து அருள்புரிவது போன்றும் பல்வேறு காட்சிகள் தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டுள்ளன.

Category

🗞
News
Transcript
00:29I'll see you next time.
00:59I'll see you next time.
01:29I'll see you next time.
01:50I'll see you next time.

Recommended