சென்னை கிண்டியில் உள்ள அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் (ITI) நடைபெற்ற அரசு விழாவில், தமிழ்நாடு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் பங்கேற்று அதிநவீன மின்சார திறன் ஆய்வகங்களை (Advanced Electrical Skill Labs) திறந்து வைத்தார். மேலும், தொழிற்பயிற்சி நிலையங்களின் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கான புதிய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் (MoU) முதலமைச்சர் முன்னிலையில் பரிமாறிக் கொள்ளப்பட்டன. அதனைத் தொடர்ந்து, போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற்ற 673 இளநிலை பயிற்சி அலுவலர்களுக்குப் பணி நியமன ஆணைகளையும், சாதனை படைத்த மாணவர்களுக்கு நற்சான்றிதழ்களையும் முதலமைச்சர் வழங்கினார்.
For More Local News, Breaking News, Kollywood Movie News & updates and videos from Tamil Nadu, Puducherry, India, and around the world in Tamil Be a Part of Asianet News Network. For More, visit ►►https://tamil.asianetnews.com