Skip to playerSkip to main content
  • 11 minutes ago
வேலூர்: சுமார் ஒரு மணி நேரம் இடைவிடாமல் கொட்டித் தீர்த்த கனமழையால் நகரின் பல்வேறு பகுதிகளில் குளிர்ச்சியான சூழல் நிலவியது.வேலூர் மாவட்டத்தில் இன்று (நவ. 5) காலை முதலே வெயிலின் தாக்கம் குறைந்து வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இதனால் வெப்பத்தின் தாக்கம் குறைவாக இருந்தது. பிற்பகல் நேரத்தில் திடீரென கருமேகங்கள் வானில் சூழ்ந்து, பலத்த காற்றுடன் கனமழை பெய்யத் தொடங்கியது.மழை சுமார் ஒரு மணி நேரம் இடைவிடாமல் கொட்டித் தீர்த்தது. குறிப்பாக, சத்துவாச்சாரி, வேலூர், காட்பாடி, பாகாயம், வேலப்பாடி, சங்கரன்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது. திடீரென பெய்த கனமழையால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.கடந்த சில நாட்களாக நிலவி வந்த வெப்பமான சூழல் மாறி, மழைக்கு பின்னர் குளிர்ச்சியான வானிலை நிலவியது. இதனால் பொதுமக்கள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்தனர். குறிப்பாக, மழையை எதிர்பார்த்துக் காத்திருந்த விவசாயிகளுக்கும் இந்த மழை மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மழையால் மாவட்டம் முழுவதும் குளிர்ந்த சூழல் நிலவியது.

Category

🗞
News
Transcript
00:00I'm going to get a lot of food from my house.
00:06I'm going to get a lot of food from my house.

Recommended